கற்றல் நன்றே

" கல்வி " இந்த சொல் என்னவென்றே தெரியாமல் நாடோடியாய் உலகின் பெரும்பாலான மனிதர்கள் வாழ்ந்தனர்.., எழுதப்படிக்க தெரியாமல், மொழி இன்னது, மொழியின் வரையரை இன்னது, இந்த வார்த்தையின் அர்த்தம் இதான் என்று நாகரிகமற்று நாடோடியாய் இன்னும் சில மனிதர்கள் வாழ்ந்த காலங்களில்.., அரசன் தொடங்கி சாமானிய மக்கள் தொடங்கி அனைவரும் கல்வியின் மேன்மையை உணர்ந்து கல்வியறிவு பெற்றிருந்த ஒர் இனம் உண்டெனில் " கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடுமுன் தோன்றி மூத்த குடி "யான நம் தமிழ்குடி ஒன்றே.. சாதாரண குடியானவன் கல்வியில் சிறந்து விளங்கியிருக்கும் பொழுது நாட்டை ஆளும் மன்னன் மட்டும் சிறப்பானா கல்வியறிவு பெற்று அதன் சிறப்புகளை உணராமல் இல்லை.. தமிழ் மன்னர்கள் தம்மை நாடி வந்த புலவர்களையும், பாணர்களையும் மட்டும் ஆதரித்து அவர்களின் படைப்புகளை மட்டும் ரசித்து கொண்டிருக்கவில்லை அவர்களை போலவும், ஏன் அவர்களை விஞ்சும் அளவுக்கு கூட பாடல் இயேற்றும் திறன் பெற்றிருந்தனர் சங்க இலக்கியமான புறநானூற்றில் தான் தமிழ் மன்னர்கள் பாடிய பாடல்கள் மிகுந்துள்ளன.. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள...