Posts

Showing posts from April, 2020

ராஜராஜேஸ்வரம் சிவபுரம் - ஒரகடம்

Image
சிவபுரம்  இந்த ஊர் காஞ்சிபுர மாவட்டம் ஒரகடம் அருகேயுள்ள ஒரு சிற்றூர் இந்த ஊர் முதலாம் இராசேந்திர சோழரின் 12 ம் ஆட்சி ஆண்டு வரை  உரோகடம்  என்றும் 13 ம் ஆட்சி ஆண்டு முதல்  சிவபுரம்  என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது இவ்வூரில் உள்ள சிவாலயம்  முழுவதும் கருங்கற்களால் அமைந்த ஒரு தள விமான அமைப்பையும் கொண்டது இந்த சிவாலயம் சோழ  மாமன்னர் முதலாம் இராசராசன்  ( 985 -1014 ) ஆட்சியின் 24 வது ஆண்டில் ஏற்கனவே இருந்த கோவிலை புதுப்பித்தோ அல்லது புதியதாகவோ கட்டப்பட்டுள்ளது     ராஜராஜேஸ்வரத்தின்      முகப்பு கோவிலின் கருவறை , முகமண்டபம் , ஆளுயர தூவர பாலகர்கள் என இராச இராசரின் தனித்துவ கட்டிட பாணியை தாங்கி நிற்கின்றன விமானமும் இராச இராசன் தன் பாட்டன் அரிஞ்சிய சோழருக்கு எடுப்பித்த பள்ளிப்ழடையின் விமான அமைப்பை நினைவூட்டுகின்றது  விமானத்தின் அமைப்பு சோழர் கால எழில்மிகு கோட்ட சிற்பங்களும் , சண்டிகேஸ்வர் சிற்பங்களும் இக்கோவிலுக்கு இன்னும் அழகூட்டுகின்றன தேவக்கோட்ட சிற்பங்கள் மற்றும் சண்டிகேஸ்வர் சிற்பம் துவார பாலகர்கள் கல்வெட்டு தகவல்கள் கோவிலின் சுற்று சவர் முழுதும் கல்வெட்டுகள் நிரம்ப காணப்படுகின்ற

பல்லவர்களின் முதல் கல்வெட்டு - மஞ்சிக்கல்லு கல்வெட்டு

Image
களப்பிரர்களை வீழ்த்தி காஞ்சியை கைப்பற்றியவர்கள் எனக்கருதப்படும் பல்லவர்களின் ஆட்சி தொண்டை மண்டலம் தொடங்கி சோழநாடு வரை பரவியிருந்தது கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகள் தமிழகத்தின் வடப்பகுதியை  ஆண்ட பல்லவர்கள் தமிழக்திற்கு ஆற்றிய பணிகள் பல பல ஏரிகள் , கோவில்கள் , குடைவரைகள் போன்றவற்றை உருவாக்கினர் பல்லவர்கள் நமக்களித்த கலைச்செல்வங்களின் ஒன்றான காஞ்சி கைலாசநாதர் ஆலய கங்காதரர் வடதமிழகம் மற்றம் தெலுங்கானாவில் சில இடங்களில்   பல்லவர்கள் கல்வெட்டுகள் உள்ளன , ஆனால் இதுவரை பதிவு செய்யப்பட்ட பல்லவர் கல்வெட்டுகளில் காலத்தால் முதன்மையானது தெலுங்கானவிலுள்ள  குண்டூர் அருகிலுள்ள மஞ்சிக்கல்லுவில் கிடைத்த முற்கால பல்லவன் முதலாம் சிம்மவர்மனின் கல்வெட்டு சிம்மவர்மனின் மஞ்சிகல்லு கல்வெட்டு இந்த கல்வெட்டில் தன்னை பரத்வாஜ மாமுனியின் கோத்திரத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்தவன் என்று கூறிக்கொள்கின்றான் மேலும் இக்கல்வெட்டு இவ்வரசன் தன் சக்தியையும் தனக்கு வரக்கூடிய வரக்கூடிய நன்மைகளையும பெருக்கிக்கொள்ள கம்பளி போர்வைகளை பரிசளித்தைப்பற்றி கூறுகின்றது தகவல்கள்: Epigraphy Indica 32 Inscriptions

குணபதேயம் செப்பேடு - அரச குல பெண்கள் தானம் அளித்து பற்றி பகரும் முதல் ஆவணம்

Image
தமிழக வரலாற்றில்  பெண்களின் பங்கு அலாதியானது , சோழ அரசி செம்பியன் மாதேவி , லோகமாதேவி , குந்தவை நாச்சியார் போன்று பல அரச குல பெண்கள் , தானங்களை சாதரண குடிமகன் தொடங்கி , மிகப்பெரிய கோவில்கள் வரை தானங்கள் வழங்கியுள்ளனர் இவற்றை தமிழகமெங்கும் உள்ள  கல்வெட்டுகளும் , பலசெப்பேடுகளும் பகர்கின்றன , இவ்வகையில் காலத்தால் முற்பட்டது , முற்கால பல்லவ இளவரசன் விஜய புத்தவர்மனுடைய மனைவி சாருதேவியினுடையது (கி.பி 350) (செப்பேட்டினை இணைக்கும் வளையம் இதில் பல்லவர்களின் சின்னமான காளையின் உருவம் உள்ளதாய் குறிப்புகள் உள்ளன )  மொத்தம் மூன்று ஏடுகளில் பதினாரு வரியில் பிராகிருத மற்றும் சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ள இந்த செப்பேடு , தற்போது இலண்டன் அருங்காட்சியத்தை அலங்கரித்து கொண்டுள்ளது  செப்பேட்டின் தகவல்கள் ஶ்ரீ விஜயஸ்கந்தவர்மனுடைய ஆட்சியில்  யுவமகராஜனும் , பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்த பல்லவர் வம்சத்தை சேர்ந்த ஶ்ரீவிஜயபுத்தவர்மனுடைய மனைவியின் சாருதேவியின் கட்டளை ராஜதாடாகத்தின்.அருகேயுள்ள குடிநீர் கிணற்றின் வலதுபுறம் தற்போது பயிரிட்டு கொண்டிருக்கும் நிலத்தை  மஹாதரகம் எனும் ஊரில் உள்ள தேவகுலத்தின் (ஆலயம்)