குணபதேயம் செப்பேடு - அரச குல பெண்கள் தானம் அளித்து பற்றி பகரும் முதல் ஆவணம்

தமிழக வரலாற்றில்  பெண்களின் பங்கு அலாதியானது , சோழ அரசி செம்பியன் மாதேவி , லோகமாதேவி , குந்தவை நாச்சியார் போன்று பல அரச குல பெண்கள் , தானங்களை சாதரண குடிமகன் தொடங்கி , மிகப்பெரிய கோவில்கள் வரை தானங்கள் வழங்கியுள்ளனர் இவற்றை தமிழகமெங்கும் உள்ள  கல்வெட்டுகளும் , பலசெப்பேடுகளும் பகர்கின்றன , இவ்வகையில் காலத்தால் முற்பட்டது , முற்கால பல்லவ இளவரசன் விஜய புத்தவர்மனுடைய மனைவி சாருதேவியினுடையது (கி.பி 350)


(செப்பேட்டினை இணைக்கும் வளையம் இதில் பல்லவர்களின் சின்னமான காளையின் உருவம் உள்ளதாய் குறிப்புகள் உள்ளன ) 

மொத்தம் மூன்று ஏடுகளில் பதினாரு வரியில் பிராகிருத மற்றும் சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ள இந்த செப்பேடு , தற்போது இலண்டன் அருங்காட்சியத்தை அலங்கரித்து கொண்டுள்ளது  செப்பேட்டின் தகவல்கள்

ஶ்ரீ விஜயஸ்கந்தவர்மனுடைய ஆட்சியில் 

யுவமகராஜனும் , பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்த பல்லவர் வம்சத்தை சேர்ந்த ஶ்ரீவிஜயபுத்தவர்மனுடைய மனைவியின் சாருதேவியின் கட்டளை ராஜதாடாகத்தின்.அருகேயுள்ள குடிநீர் கிணற்றின் வலதுபுறம் தற்போது பயிரிட்டு கொண்டிருக்கும் நிலத்தை  மஹாதரகம் எனும் ஊரில் உள்ள தேவகுலத்தின் (ஆலயம்) பகவான் நாரயணுக்கு என்னுடைய ஆயுள் , வலிமை , வளர்ச்சிகாக நிலம் தானாமாய் கொடுக்கப்படுகின்றது 

இந்த விவரத்தை அனைத்து அரசு அதிகாரிகளும் அறிந்து அனைத்து வரி விலக்குகளும் பெற்று தரவேண்டும்  இதுதான் செப்பேட்டின் தகவல்


மேலும் இருதியில் உள்ள சமஸ்கிருத வரிகள் நிலம் தானம் கொடுப்பதின் நன்மைகளையும் , அந்நிலத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகளையும் கூறுகின்றது 

மேலும் தமிழக்தின் இருண்ட காலம் எனக்கருதப்பட்ட காலத்தில் இருந்த பெண்களின் நிலையைக்கூறுகின்றது 

இந்த செப்பேடு இன்றைய தெலுங்கானவிலுள்ள  குண்டூர் அருகேயுள்ற குணபதேயம் எனும் ஊரில் கிடைத்ததால் குணேபதயம் செப்பேடு எனப்படுகின்றது 


தகவல்கள் : 

பல்லவர் காலச்செப்பேடுகள் - மு.இராசேந்திரன்

இருண்டகாலமா..? - கலைக்கோவன்

The Indian Antiquary Vol. 9 பக்கம் 100 (படங்கள்)

Comments

Popular posts from this blog

பட்டினப்பாலை காட்டும் தமிழரின் வணிகம்

கற்றல் நன்றே

சோழபுரம்- தமிழகத்தின் முதல் பள்ளிப்படை