பல்லவர்களின் முதல் கல்வெட்டு - மஞ்சிக்கல்லு கல்வெட்டு
களப்பிரர்களை வீழ்த்தி காஞ்சியை கைப்பற்றியவர்கள் எனக்கருதப்படும் பல்லவர்களின் ஆட்சி தொண்டை மண்டலம் தொடங்கி சோழநாடு வரை பரவியிருந்தது கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகள் தமிழகத்தின் வடப்பகுதியை ஆண்ட பல்லவர்கள் தமிழக்திற்கு ஆற்றிய பணிகள் பல பல ஏரிகள் , கோவில்கள் , குடைவரைகள் போன்றவற்றை உருவாக்கினர்
![]() |
பல்லவர்கள் நமக்களித்த கலைச்செல்வங்களின் ஒன்றான காஞ்சி கைலாசநாதர் ஆலய கங்காதரர் |
வடதமிழகம் மற்றம் தெலுங்கானாவில் சில இடங்களில் பல்லவர்கள் கல்வெட்டுகள் உள்ளன , ஆனால் இதுவரை பதிவு செய்யப்பட்ட பல்லவர் கல்வெட்டுகளில் காலத்தால் முதன்மையானது தெலுங்கானவிலுள்ள குண்டூர் அருகிலுள்ள மஞ்சிக்கல்லுவில் கிடைத்த முற்கால பல்லவன் முதலாம் சிம்மவர்மனின் கல்வெட்டு
சிம்மவர்மனின் மஞ்சிகல்லு கல்வெட்டு |
இந்த கல்வெட்டில் தன்னை பரத்வாஜ மாமுனியின் கோத்திரத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்தவன் என்று கூறிக்கொள்கின்றான் மேலும் இக்கல்வெட்டு இவ்வரசன் தன் சக்தியையும் தனக்கு வரக்கூடிய வரக்கூடிய நன்மைகளையும பெருக்கிக்கொள்ள கம்பளி போர்வைகளை பரிசளித்தைப்பற்றி கூறுகின்றது
தகவல்கள்:
Epigraphy Indica 32
Inscriptions of pallavas - TV Mahalingam
Comments
Post a Comment