பட்டினப்பாலை காட்டும் தமிழரின் வணிகம்
இன்றைய தமிழகம் வணிக துறையில் ஏற்றுமதி இறக்குமதியில் இந்தியாவில் எந்த மாநிலத்தை காட்டிலும் முன்னிலையில் உள்ளது தமிழகத்தின் துறைமுகங்களோ உலக அளவில் மற்ற முன்னணி நாடுகளுடன் போட்டிபோடும் விதத்தில் சிறந்து விளங்குகிறது இன்று மட்டுமல்ல கிட்டத்தட்ட சங்க காலம் தொட்டே தமிழக துறை முகங்கள் இரவு பகல் பாராமல் இயங்கின என்றால் நம்பமுடிகிறதா..? ஆம் சங்க கால சோழ மாமன்னன் கரிகாற்பெருவளவனின் வணிக தலைநகராக விளங்கிய காவிரிபூம் பட்டினத்தின் துறைமுகமும் அதை சார்ந்த அங்காடிகளும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இரவும் பகலும் இயங்கியுள்ளது பகலில் இயங்கிய கடைகளுக்கு நாளங்காடி எனவும் இரவில் இயங்கிய கடைகளுக்கு அல்லாங்காடி எனவும் பெயரிடப்பட்டது
இன்றைய சுங்க நடைமுறையும் அப்போதே தொடங்கிவிட்டது போலும் இதனை
"புலிபொறித்துப் புறம்போக்கி"
மேற்சொன்ன பட்டினப்பாலை வரிகள் மூலம் காவிரி பூம்பட்டினத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது சோழரின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டது என்பது புலனாகிறது
தமிழர்கள் பல நாடுகள் கடந்து பல்வேறு மொழி கற்றுனர்ந்து வணிகம் செய்தனர் இதன் காரணமாக தான்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு"
என்ற பழமொழி தோன்றிற்று போலும்
காவிரிப்பூம்பட்டினத்தில் பல்வேறு மொழி பேசும் பல்வேறு நாட்டினரும் பல்கி வாழ்ந்தனர் என்றால் மிகையாகாது
மேலும் காவிரிபூம்பட்டினத்தில் கையாளப்பட்ட பொருட்களாக பின்வரும் பாடலால் அறியலாம்
"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துண்ர்வும் காழகத் தாக்கமும்" இதன் பொருள் பின்வருமாறு
மரக்கலண்களில் கொண்டுவரப்பட்ட குதிரைகளும், மிளகு மூட்டைகளும், மேருமலையில் தோன்றிய மாணிக்கமும், பொன்னும், மேற்கு மலையில் கிடைத்த சந்தனமும்,அதிலும், கொற்க்கை முத்துகளும், கிழக்கு கடற்கரையில் கொனற்ந்த பவளமும், கங்கை, காவிரியில் கிடைத்த பொருட்களும்,ஈழம், காடரம்(இன்றைய மலேசியா) பொருட்களும்
இரு துறைமுகமும் எத்துணை சிறப்பாக நிர்வகிக்கப்பட்டிருந்தால் இத்துணை பொருட்கள் கையாளப்பட்டிருக்கும்..?
பண்டைய தமிழகத்தின் வணிகம் எத்துணை சிறப்பாக நடந்தது என்பதனை சங்க கால நூலான பட்டினப்பாலை கூறுகின்றது மேலும் இந்நூல்
மாமன்னன் கரிகாற்பெருவளவனின் போர்திறன், சோழநாட்டின் வளம், போன்றவற்றையும் சுவைப்பட பகர்கின்றது இந்நூலை பாடியமைக்கு இதன் ஆசிரியர் கடியலூர் உருத்திரன் கண்ணணார்க்கு கரிகாற்பெருவளவன் பதினாறு நூறாயிரம் பொன் அளித்தான் என்று கலிங்கத்துப் பரணி கூறுகின்றது
மேலும் சோழரின் ஆளுமையை எதிர்த்து சோழ நாட்டை கைப்பற்றி அந்நகரின் அரண்மனை மாட மாளிகைகளை இடித்து தள்ளிய பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஒரேயொரு பதினாறு கால் மண்டப்ததினை மட்டும் விட்டுவிட்டானம் அது பட்டினப்பாலை பாடியமைக்கு கரிகாற்பெருவளவன் உருத்திரன் கண்ணணார்க்கு கட்டிய மண்டபமாம்..
இச்செய்தி திருவெள்ளரை கோவிலில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது சோழ பாண்டிய பகமை மறந்து இம்மண்டபம் நீடித்தது என்றால் எத்துணை வாய்ந்த நூலாகவிருந்திருக்கும்..? இந்நூல் மட்டும் அல்ல சங்க நூல்கள் அனைத்தும் அற நெறிக்களஞ்சிகங்கள் இன்றைய இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கி தமிழின் பெருமையை மறக்காமல் நல்ல தமிழ் நூல்களை கற்ப்போம்.. கற்றவற்றை கற்ப்பிப்போம்..
வெ.கண்ணன்
Comments
Post a Comment