Posts

Showing posts from 2019

கற்றல் நன்றே

Image
" கல்வி " இந்த சொல் என்னவென்றே தெரியாமல் நாடோடியாய் உலகின் பெரும்பாலான மனிதர்கள் வாழ்ந்தனர்.., எழுதப்படிக்க தெரியாமல், மொழி இன்னது, மொழியின் வரையரை இன்னது, இந்த வார்த்தையின் அர்த்தம் இதான் என்று நாகரிகமற்று நாடோடியாய் இன்னும் சில மனிதர்கள் வாழ்ந்த காலங்களில்.., அரசன் தொடங்கி சாமானிய மக்கள் தொடங்கி  அனைவரும் கல்வியின் மேன்மையை உணர்ந்து கல்வியறிவு பெற்றிருந்த ஒர் இனம் உண்டெனில்  " கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடுமுன் தோன்றி மூத்த குடி "யான நம் தமிழ்குடி ஒன்றே.. சாதாரண குடியானவன் கல்வியில் சிறந்து விளங்கியிருக்கும் பொழுது நாட்டை ஆளும் மன்னன் மட்டும் சிறப்பானா கல்வியறிவு பெற்று அதன் சிறப்புகளை உணராமல் இல்லை.‌. தமிழ் மன்னர்கள் தம்மை நாடி வந்த புலவர்களையும், பாணர்களையும் மட்டும் ஆதரித்து அவர்களின் படைப்புகளை மட்டும் ரசித்து கொண்டிருக்கவில்லை  அவர்களை போலவும், ஏன் அவர்களை விஞ்சும் அளவுக்கு கூட பாடல் இயேற்றும் திறன் பெற்றிருந்தனர் சங்க இலக்கியமான புறநானூற்றில் தான் தமிழ் மன்னர்கள் பாடிய  பாடல்கள் மிகுந்துள்ளன.. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள

இந்தளூர் கோழி நடுக்கல்

Image
தமிழகத்தில்  சங்க காலம் தொட்டே போரிலோ அல்லது வேறு ஏதேனும் வீரச்செயலில் ஈடுப்பட்டு வீரமரணம் அடைந்த நபர்களுக்கு அவரின் செயலை நினைவு கூறும் வகையில் நினைவுக்கற்கள் எழுப்பட்டுள்ளன  "காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல் என்று இருமூன்று வகையிற் கல்லொடு புணர " என்ற தொல்காப்பிய தொடர்கள் நடுக்கல் எவ்வாறு அமைய‌ வேண்டும் என்றும், அதில் அவ்வீரனின் புகழ் பொறிக்கப்பட்டு வழிப்படப்பட்டுள்ளது என்று மேற்ச்சொன்ன தொல்காப்பிய வரிகள் மூலம் அறியலாம் மேலும் சங்க கால கடையேழு வள்ளள்களின் ஒருவனான அதியமான் நெடுமான் அஞ்சியின் மரணத்திற்க்கு பின் பாடிய புறநானூற்றுப்பாடல் ஒன்றில் நடுக்கல் பற்றி குறிப்பிடுகின்றார் அப்பாடல் பின்வருமாறு    "இல்லாகியரோ காலை மாலை அல்லாகியர் யான் வாழும் நாளே நடுகல் பீலி சூட்டி நார் அரி சிறு கலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய நாடு உடன் கொடுப்புவும் கொள்ளாதோனே" (புறம்- 232) தன் நாட்டையே பிறர் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளாத இந்நெடுமான் அஞ்சி அவனுக்கு நடுக்கல் எழுப்பி அக்கல்லில் மயிலிறகு சொறுகி இனிய சுவ

கம்ப வர்மன் கால தா.வேளூர் நடுக்கல்

Image
காதலையும் வீரத்தையுமே இரு கண்களாய் பாவித்து வாழ்ந்த தமிழர்கள் போரிலோ அல்லது ஏதேனும் பூசலிலோ வீரச்செயல் புரிந்து உயிர் நீத்த வீரர்களுக்கு நினைவுக்கல் எழுப்பி வழிப்பட்டுள்ளனர் இதை வீரக்கல், நடுக்கல் என்றும் வழங்குவர்… தமிழகத்தில் அதிக அளவில் நடுக்கற்கள் செஞ்சி, சேலம், பகுதிகளில் கிடைக்கின்றன நடுக்கற்கள் மனிதர்களுக்கு மட்டும் அல்லாது சேவலுக்கும், நாய்களுக்கு கூட எடுக்கபட்டுள்ளது, நடுக்கற்கள் பெரும்பாலும் காட்டு மிருங்களுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த வீரனுக்கும், ஆநிரைகளை கவரும் பொருட்டோ, அல்லது கவர்ந்த ஆநிரைகளை மீட்க்கும் பொருட்டோ நிகழ்ந்த போரில் வீரமரணம் அடைந்த வீரனுக்கோ நடுக்கற்கல் எழுப்பட்டுள்ளன  ஆனால் தற்போதைய திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள தா.வேளூர் எனுமிடத்தில் பல்லவ மன்னன் கம்ப வர்மன் காலத்தில் எடுக்கப்பட்ட நடுக்கல்லானது கள்வர்களால் கடத்தபட்ட பெண்ணை மீட்க நடந்த போரில் அப்பெண்ணை மீட்டு வீர மரணமடைந்த வீரனுக்கு எடுக்கப்பட்டுள்ளது அந்நடுக்கல்லின் நகல் படி இதோ நடுக்கல்லில் உள்ள கல்வெட்டின் எழுத்துகளின் அமைப்பு  அதன் வரி படியே அமைத்து கீழே தரப்பட்டுள்ளது 1.(ஸ) ஸி ஸ்

சோழபுரம்- தமிழகத்தின் முதல் பள்ளிப்படை

Image
காலம் எத்துணை கோரமானது என்றால் உலகையே கட்டியாண்ட மாமன்னனை கூட உரு தெரியால் அழித்து விடக்கூடியது  மன்னர்களுக்கே இந்நிலையென்றால் அவர்களின் கோநகர்கள் மட்டும் நிலைத்திருக்குமா என்ன..? உலகெங்கும் தமிழக முத்துக்களையும், வாசனை திரவியங்களையும், கொண்டு சேர்த்து தமிழகத்தை தேடி ரோமானியரையும், கிரேக்கரையும், சீனரையும் ஓடிவரச்செய்த காவிரிபூம்பட்டிணம், கொற்க்கை, முசிறி போன்ற உலகப்புகழ் பெற்ற துறைமுகப்பட்டிணங்கள் கண்ணுக்கு தெரியாமல் காற்றோடு கலந்தது காலத்தின் கோர விளையாட்டே இதே காலத்தின் விளையாட்டால் தன் பெருமைகளை இழந்த ஊர் தான் சோழபுரம் தமிழகம் முழுதும் ஒரே கொடையின் கீழ் ஆட்சி புரிந்த சோழர்கள் தங்களின் பெயரில் பல ஊர்களையும் வளநாடுகளையும் உருவாக்கினர் ஏற்கனவே இருந்த ஊர்களுக்கும் கூட பெயர் மாற்றம் செய்தனர்... சோழபுரம் இந்த பெயரில் தமிழகம் முழவதும் பல சிற்றூர்கள் இருந்தாலும் வேலூர் அருகேயுள்ள சோழவரம் எனும் இயற்கை எழில் கொஞ்சும் தற்போதைய சிற்றூர் 9ம் நூற்றாண்டு முதலே சிறப்புடன் இருந்துள்ளது,  சோழவரம் பல்லவர் காலத்தில் இவ்வூர் படூவூர் கோட்டத்து பங்காள நாட்டு பிரிவிலும், மாமன்னர் ராச ராசன்சோழர் காலத்தி

பட்டினப்பாலை காட்டும் தமிழரின் வணிகம்

Image
இன்றைய தமிழகம் வணிக துறையில் ஏற்றுமதி இறக்குமதியில் இந்தியாவில் எந்த மாநிலத்தை காட்டிலும் முன்னிலையில் உள்ளது தமிழகத்தின் துறைமுகங்களோ உலக அளவில் மற்ற முன்னணி நாடுகளுடன் போட்டிபோடும் விதத்தில் சிறந்து விளங்குகிறது  இன்று மட்டுமல்ல கிட்டத்தட்ட சங்க காலம் தொட்டே தமிழக துறை முகங்கள் இரவு பகல் பாராமல் இயங்கின என்றால் நம்பமுடிகிறதா..? ஆம் சங்க கால சோழ மாமன்னன் கரிகாற்பெருவளவனின் வணிக தலைநகராக விளங்கிய காவிரிபூம் பட்டினத்தின் துறைமுகமும் அதை சார்ந்த அங்காடிகளும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இரவும் பகலும் இயங்கியுள்ளது பகலில் இயங்கிய கடைகளுக்கு நாளங்காடி எனவும் இரவில் இயங்கிய கடைகளுக்கு அல்லாங்காடி எனவும் பெயரிடப்பட்டது இன்றைய சுங்க நடைமுறையும் அப்போதே தொடங்கிவிட்டது போலும் இதனை  "புலிபொறித்துப் புறம்போக்கி" மேற்சொன்ன பட்டினப்பாலை வரிகள் மூலம் காவிரி பூம்பட்டினத்தில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது சோழரின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டது என்பது புலனாகிறது தமிழர்கள் பல நாடுகள் கடந்து பல்வேறு மொழி கற்றுனர்ந்து வணிகம் செய்தனர் இதன் காரணமாக தான்   திரைகடல் ஓடியும்