கம்ப வர்மன் கால தா.வேளூர் நடுக்கல்

காதலையும் வீரத்தையுமே இரு கண்களாய் பாவித்து வாழ்ந்த தமிழர்கள் போரிலோ அல்லது ஏதேனும் பூசலிலோ வீரச்செயல் புரிந்து உயிர் நீத்த வீரர்களுக்கு நினைவுக்கல் எழுப்பி வழிப்பட்டுள்ளனர் இதை வீரக்கல், நடுக்கல் என்றும் வழங்குவர்…

தமிழகத்தில் அதிக அளவில் நடுக்கற்கள் செஞ்சி, சேலம், பகுதிகளில் கிடைக்கின்றன

நடுக்கற்கள் மனிதர்களுக்கு மட்டும் அல்லாது சேவலுக்கும், நாய்களுக்கு கூட எடுக்கபட்டுள்ளது, நடுக்கற்கள் பெரும்பாலும் காட்டு மிருங்களுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த வீரனுக்கும், ஆநிரைகளை கவரும் பொருட்டோ, அல்லது கவர்ந்த ஆநிரைகளை மீட்க்கும் பொருட்டோ நிகழ்ந்த போரில் வீரமரணம் அடைந்த வீரனுக்கோ நடுக்கற்கல் எழுப்பட்டுள்ளன 

ஆனால் தற்போதைய திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள தா.வேளூர் எனுமிடத்தில் பல்லவ மன்னன் கம்ப வர்மன் காலத்தில் எடுக்கப்பட்ட நடுக்கல்லானது கள்வர்களால் கடத்தபட்ட பெண்ணை மீட்க நடந்த போரில் அப்பெண்ணை மீட்டு வீர மரணமடைந்த வீரனுக்கு எடுக்கப்பட்டுள்ளது அந்நடுக்கல்லின் நகல் படி இதோ







நடுக்கல்லில் உள்ள கல்வெட்டின் எழுத்துகளின் அமைப்பு 

அதன் வரி படியே அமைத்து கீழே தரப்பட்டுள்ளது

1.(ஸ) ஸி ஸ்ரீ கோவிசைய கம்ப பருமற்க்கு யாண்டு 
எ வ த

2. ட்டாவது வயிரமேக வாண கோவரைய நா

 3.ளத் தகடூர் நாட்டுப் பாகாற்றூர்க்க

 4.மாகாதேவன் மகன் காமைந் மீய் கொன்

  5.றை நாட்டு கோவனூர் இருந்து வாழா நின்ற காலத்

   6. து முருங்கை சேரி நத்தத்த ந்றமை        

     யனார்

   7. மகளைக் கள்ளர்

   8. பிடி கவர்ந்துர த

   9. ற் கொண்டை ய 

  10.  அவளை விடு

  11.வித்துத்தா

  12. ன் பட்டான் கா

  13.  டரமன்

நடுக்கல்லில் அமைந்த கல்வெட்டு தகவலின் விளக்கம்

  

பல்லவ மன்னன் கம்ப வர்மனின் எட்டாவது (எழாவது) 

ஆட்சியாண்டில் அவரின் கீழ் சிற்றரசனாய் இருந்த

வைர மேக வாண கோவரையன் ஆளும் தகடூர் நாட்டின் 

பாகாற்றூரை சேர்ந்த மகாதேவன் மகனான காமைந்மீய்

என்பவர் கொன்றை நாட்டு கோவனூரில் வாழ்ந்த காலத்தில்

முருங்கைச்சேரி நத்தன் என்பவரின் அண்ணன் மகளை 

கள்வர்கள் கடத்தி சென்ற போது அவளை காப்பாற்றும் பொருட்டு

போரிட்டு, அவளை காப்பாற்றி வீரமரணமடைந்தான்

என்று இதில் அமைந்துள்ள கல்வெட்டு கூறுகிறது ( கல்வெட்டு விளக்கம்- தம்பி பொன் கார்த்திகேயன்)

இது போல் கணக்கற்ற கல்வெட்டுகளும், நடுக்கற்களும்

தமிழகமெங்கும் பரவியுள்ளன ஒவ்வொன்றும்

இதே போன்று பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட தகவல் களஞ்சியங்கள்

 இவற்றை காத்து வரலாற்றை வாழ வைப்போம்

வெ.கண்ணன்

Comments

Popular posts from this blog

பட்டினப்பாலை காட்டும் தமிழரின் வணிகம்

கற்றல் நன்றே

பல்லாவரம் பல்லவர் குடைவரை