Posts

Showing posts from May, 2020

அபராஜித்தனின் வேலஞ்சேரி செப்பேடு

Image
வேலஞ்சேரி செப்பேடு தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான ஆவணம் , இச்செப்பேடு கிடைக்கும் வரை பல்லவ அரசர்களான கம்பவர்மன் , நிருபதுங்கவர்மன் , அபராஜித்தவர்மன் பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மனின் மகன்கள் தான் என்று அனைத்து வரலாற்று அறிஞர்களும் கருதினர் ஆனால் இந்த செப்பேடு தான் இந்த கருதுகோள்களை பொய்யாக்கியது செப்பேட்டின் அமைப்பு இந்த செப்பேடு இன்றைய திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள வேலஞ்சேரி எனுமிடத்தில் 1977 ம் ஆண்டு கண்டறியப்பட்டது , மொத்தம் ஐந்து ஏடுகளையும் , இந்த ஏடுகளை இணைக்கும் வளையத்தில் பல்லவர்களின் காளைச்சின்னமும் அதனை சுற்றி பல்லவ அரசன் அபராஜித்தன் மற்ற குல அரசர்களுக்கு விடுக்கும் ஆணை என்று பொறிக்கப்பட்டுள்ளது , வழக்கமான பிற்கால பல்லவர் செப்பேடுகளை போல் இந்த செப்பேடும் வட மொழி மற்றும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது வடமொழிப் பகுதியை பெரிய காவியங்களை எழுக்கூடிய ஶ்ரீகுமரனின் மகன் மகாதேவனும் , பல்லவரின் அரசு சின்னத்தை விடேல் விடுகு பெருங்கண்ணனும் , தமிழ் பகுதியை பொதினி மகாதேவபட்டனும் இந்த செப்பேட்டை காஞ்சியில் பிறந்த சிற்பி விஜயன்னாவும் செதுக்கியுள்ளார் இவர்களின் இந்த