Posts

Showing posts from 2023

வேடுவ சிவனும் அர்ஜுனனும் - கிராத அர்ஜுனா

Image
சிவனாரின் 64 வடிவங்களில் ஒன்று வேடுவ சிவ வடிவம் , க சிவபெருமானிடம் பாசுபதம் பெறுதல் பொருட்டு அர்ஜுனன் சிவனை நோக்கி தவம் கொண்டிருந்தார், அதனை கலைக்க எண்ணி துரியோதனன் முகாசுரன் என்ற அரக்கனை அனுப்பினார், அவ்வரக்கன் பன்றி வடிவில் தவத்தினை கலைக்க அர்ஜுனன் மீது பாய்ந்தார், இதனால் கோபமுற்ற அர்ஜுனன் வில்லால் அவ்வரக்கனை தாக்கினார், அதே சமயத்தில் மற்றொரு அம்பும் அவ்வரக்கன் மீது பாய்ந்தது, அவ்வம்பு வேடுவனாக வந்த பரம்பொருள் சிவபெருமானது, இரு அம்புகளும் சரியான நேரத்தில் அப்பன்றியை தாக்கின, இறந்த அப்பன்றி யாருடைய அம்பினால் இறந்தது என்று, பார்த்திபனுக்கும், வேடுவனாக வந்த சிவனாருக்கும், வாக்குவாதம் ஏற்பட்டு அது இறுதியில் மற்போர், விற்போராக மாறிற்று,  தனக்கு சமமாய் ஒருவர் போரிடுவதால் சந்தகமுற்ற அர்ஜுனன் தன்னுடன் போரிடுவது சாதாரண வேடுவன் இல்லை என்று உணர்ந்தார்  இருதியில் வேடுவனாக வந்த சிவபெருமான் இறுதியில் தன் சுய உருவினை பார்த்திபனுக்கு காட்டி பாசுபதம் அளித்தார்   இந்நிகழ்வு தேவரா திருப்பதிகங்களிலும் சிவபெருமானின் திருவிளையாடாலாக இடம்பெற்றுள்ளது  "பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபத மீந்துகந்தான்&quo

முதலாம் பரமேஸ்வர பல்லவரின் சிற்றாம்பாக்கம் கல்வெட்டு

Image
காஞ்சியை கோ நகராய் கொண்டு தமிழகத்தினை ஆண்ட பல்லவர்கள் தங்கள் கல்வெட்டு சாசங்களில் சில கல்வெட்டுகளை தவிர்த்து பெரும்பாலும் சமஸ்கிருதத்தில் பல்லவ கிரந்த எழுத்தமைதியிலே தான் வெளியிட்டனர், எனவே பல்லவர்களால் தமிழில் வெளியிடப்பட்ட  கல்வட்டுகள் சிறப்பானதாக கருதப்படுகின்றன அவ்வகையில் திருவள்ளூர் மாவட்டம் சிற்றாம்பாக்கம் என்ற ஊரில் உள்ள கல்வெட்டானது பல்லவ மன்னர் முதலாம் பரமேஸ்வர பல்லவரின்   முதலாவது ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டுள்ளது அக்கல்வெட்டு   மன்னரது ஆட்சியாண்டினை முதலாவது என்று குறிப்பிடாமல் தலைத்த அதாவது முதலாவது  ஆட்சியாண்டினை  நேரடியாக குறிப்பிடாமல் தலைத்த என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது இவ்வகையில் சிறப்பானதாக கருதப்படுகின்றது, மேலும் முதலாம் பரமேஸ்வர பல்லவரால் எடுப்பிக்கப்பட கூரம் கற்கோவிலே  தமிழகத்தின் முதல் கற்கோவில் என்று கருதிய நிலையில், கூரம் கற்கோவிலுக்கு முன்பே அதாவது முதலாம் பரமேஸ்வர பல்லவரின் முதலாவது ஆட்சியாண்டிலேயே கருங்கற்களால் கோவில்கள் கட்டப்படாதக இக்கல்வெட்டு பகர்வதாக கூறுகின்றனர்  இவ்வகையிலும் இக்கல்வெட்டு சிறப்புடையதாகும்  இக்கல்வெட்டு எபிகிராபி இண்ட