முதலாம் பரமேஸ்வர பல்லவரின் சிற்றாம்பாக்கம் கல்வெட்டு

காஞ்சியை கோ நகராய் கொண்டு தமிழகத்தினை ஆண்ட பல்லவர்கள் தங்கள் கல்வெட்டு சாசங்களில் சில கல்வெட்டுகளை தவிர்த்து பெரும்பாலும் சமஸ்கிருதத்தில் பல்லவ கிரந்த எழுத்தமைதியிலே தான் வெளியிட்டனர், எனவே பல்லவர்களால் தமிழில் வெளியிடப்பட்ட  கல்வட்டுகள் சிறப்பானதாக கருதப்படுகின்றன அவ்வகையில் திருவள்ளூர் மாவட்டம் சிற்றாம்பாக்கம் என்ற ஊரில் உள்ள கல்வெட்டானது பல்லவ மன்னர் முதலாம் பரமேஸ்வர பல்லவரின்   முதலாவது ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டுள்ளது அக்கல்வெட்டு   மன்னரது ஆட்சியாண்டினை முதலாவது என்று குறிப்பிடாமல் தலைத்த அதாவது முதலாவது  ஆட்சியாண்டினை  நேரடியாக குறிப்பிடாமல் தலைத்த என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது இவ்வகையில் சிறப்பானதாக கருதப்படுகின்றது, மேலும் முதலாம் பரமேஸ்வர பல்லவரால் எடுப்பிக்கப்பட கூரம் கற்கோவிலே  தமிழகத்தின் முதல் கற்கோவில் என்று கருதிய நிலையில், கூரம் கற்கோவிலுக்கு முன்பே அதாவது முதலாம் பரமேஸ்வர பல்லவரின் முதலாவது ஆட்சியாண்டிலேயே கருங்கற்களால் கோவில்கள் கட்டப்படாதக இக்கல்வெட்டு பகர்வதாக கூறுகின்றனர்  இவ்வகையிலும் இக்கல்வெட்டு சிறப்புடையதாகும் 

இக்கல்வெட்டு எபிகிராபி இண்டிகா 32 ம் பதிப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது


              Epigraphy  indca 32 -  59 - 62 

கல்வெட்டின் வாசகம் 

  1. ஶ்ரீமத் ராஜபரமேஸ்வரவர்மர்க்குயாண்டு

              தலைத்தா 

  1. வது (சூரணங்கிழவருளால வாயில் சோமாசியரு) 

            வது  துணன் கிழவர்  ஆலவாயில்       சோமாசிய

  1. யரு மருமகன் கும( ரன் ) 

  1. எடுப்பித்த கோ(யில்) 


விளக்கம்: 


முதலாம் பரமேஸ்வர பல்லவரின் ஆட்சியின் முதலாவது ஆண்டில் ஆலவாயிலை சேர்ந்த சோமாசியரின் மருமகன் குமரன் எடுப்பித்த கோவில் 


இக்கல்வெட்டு செல்லியம்மன் கோவில் வாசலில் உள்ளதாக தகவல் அறிந்ததால் அங்கு சென்ற போது அங்கிருந்து மாற்றப்பட்டிருக்கின்றது அது அறியாது நீண்ட நேரம் தேடிய பிறகே இக்கல்வெட்டினை கண்டறிந்தோம் தற்போது கும்பேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ளது கும்பேஸ்வரர் கோவில்




Comments

Popular posts from this blog

பட்டினப்பாலை காட்டும் தமிழரின் வணிகம்

கற்றல் நன்றே

சோழபுரம்- தமிழகத்தின் முதல் பள்ளிப்படை