வேடுவ சிவனும் அர்ஜுனனும் - கிராத அர்ஜுனா


சிவனாரின் 64 வடிவங்களில் ஒன்று வேடுவ சிவ வடிவம் , க

சிவபெருமானிடம் பாசுபதம் பெறுதல் பொருட்டு அர்ஜுனன் சிவனை நோக்கி தவம் கொண்டிருந்தார், அதனை கலைக்க எண்ணி துரியோதனன் முகாசுரன் என்ற அரக்கனை அனுப்பினார், அவ்வரக்கன் பன்றி வடிவில் தவத்தினை கலைக்க அர்ஜுனன் மீது பாய்ந்தார், இதனால் கோபமுற்ற அர்ஜுனன் வில்லால் அவ்வரக்கனை தாக்கினார், அதே சமயத்தில் மற்றொரு அம்பும் அவ்வரக்கன் மீது பாய்ந்தது, அவ்வம்பு வேடுவனாக வந்த பரம்பொருள் சிவபெருமானது, இரு அம்புகளும் சரியான நேரத்தில் அப்பன்றியை தாக்கின, இறந்த அப்பன்றி யாருடைய அம்பினால் இறந்தது என்று, பார்த்திபனுக்கும், வேடுவனாக வந்த சிவனாருக்கும், வாக்குவாதம் ஏற்பட்டு அது இறுதியில் மற்போர், விற்போராக மாறிற்று,  தனக்கு சமமாய் ஒருவர் போரிடுவதால் சந்தகமுற்ற அர்ஜுனன் தன்னுடன் போரிடுவது சாதாரண வேடுவன் இல்லை என்று உணர்ந்தார் 

இருதியில் வேடுவனாக வந்த சிவபெருமான் இறுதியில் தன் சுய உருவினை பார்த்திபனுக்கு காட்டி பாசுபதம் அளித்தார் 


 இந்நிகழ்வு தேவரா திருப்பதிகங்களிலும் சிவபெருமானின் திருவிளையாடாலாக இடம்பெற்றுள்ளது 



"பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபத மீந்துகந்தான்" 

என்று திருஞான சம்மந்தர் தனது முதலாம் திருமுறையிலும் 



"அடுத்தானை உரித்தானை

  அருச்சுனற்குப் பாசுபதங்

கொடுத்தானைக் குலவரையே"


என்றே திருநாவுக்கரசர் தனது நான்காம் திருமுறையிலும் பாடியுள்ளனர் 



இந்நிகழ்வு சிற்ப வடிவிலும் காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றது 



இராஜசிம்மேஸ்வரம் 



பல்லவ மாமன்னன் கலை பித்தன் இராஜசிம்ம பல்லவனின் கலைக்கோவிலான இராஜசிம்மச்சரத்தில் வேடுவ சிவனாரும் அர்ஜூனரும் போரிட்டு கொள்ளும் எழில்மிகு சிற்பம் உள்ளது, சிற்பத்தின் வலதுபுறத்தில் வேடுவ சிவனார் இடது கையில் வில்லேந்தி , வலது கையில் அம்பினை தொடுக்க ஆயத்தமாகியுள்ளார் வேடுவ சிவனாரின் இடப்பக்கம் குறுவாளும் காட்டப்பட்டுள்ளது, இடப்புறத்தில் அர்ஜூனரும் இடது கையில் வில்லேந்தி , வலது கையில் அம்பினை தொடுத்து உள்ளார் , அர்ஜூனரின் காலருகே பன்றி வடிவில் முகாசுரன் உள்ளார் மிகவும் உயிரோட்டமிக்க இச்சிற்பம் வேடுவ சிவனாரும் அர்ஜுனரு போரிட்ட புராண நிகழ்வுக்கு உயிரளிப்பன 


திருவல்லம் 



தொண்டை நாட்டு பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான இராணிப்பேட்டை அருகிலுள்ள திருவல்லத்திலுள்ள சிறிய கோயிலிலுள்ள மகரத்தோரணத்தில் 

வேடுவ உருவில் சிவபெருமானும், அர்ஜுனனும் போரிடும் காட்சியுள்ளது இதில் வேடுவ சிவனாருடன் வேடுவ பெண்ணாக பார்வதி தேவியும் உள்ளார் 


வேலூர் வேப்பம்பட்டு 

 


பெரும்பாலும், வேடுவ சிவன் அர்ஜீனர் போரிடும் காட்சிகள் ஒரே காட்சியாகவே காட்சிபடுத்தப்பட்டிருக்கும் ஆனால் வேலூர் மாவட்டம் சோழவரம் அருகிலுள்ள வேப்பம்பட்டு என்ற சிற்றூரிலுள்ள சிவாலயத்தில்  

தொடர் காட்சிகளாக காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றது 


இச்சிற்பத்தின்  வலதுபுறத்தில் மரத்தடியில் ஒன்றை காலில் அர்ஜுனர் தவத்திலுள்ளார், அவரது காலடியில் முகாசுரன் பன்றி வடிவில் உள்ளார், இவர்களை தொடர்ந்து வில்லேந்திய வேடுவராக சிவபெருமானும், குழந்தை வேலவரை சுமந்தவாறு வேடுவ பெண்ணாக பார்வதி தேவியும் உள்ளார் 


அடுத்துள்ள சிற்பத் தொகுதியில் வேடுவ சிவனாரும், அர்ஜுனரும் வல்வில் அம்பு தொடுத்து இருவரும் எதிர்ரெதிர் பொருந்துவது போன்றுள்ளது, அர்ஜுனர் கீரிடம் அணிந்துள்ளார் 



வேடுவ சிவனாரும் அர்ஜுனரும் கடுமையாக போரிட்டதில் அர்ஜுனரின் காண்டீபம் உடைந்தாக புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது இந்த சிற்பத் தொகுதியில் வில்லின் நாண் உடைந்தால் வெறும் வில்லில் இருவரும் தாக்கி கொள்வதாக காட்டப்பட்டுள்ளது, இவர்கள் போரிடும் நிகழ்வினை வேடுவ பெண்ணாக வந்த பார்வதி தேவி குழந்தை வேலவனை சுமந்தவாறு பார்த்து கொண்டுள்ளார் 




இந்த சிற்பத் தொகுதியின் இடதுபுறம் வேடுவ சிவனாரும் மல்யுத்தம் புரிவது போன்றுள்ளது அர்ஜுனரின் மீது ஏறி அமர்ந்து , வேடுவர் சிவனார் அவரை தாக்க கையை ஓங்குவது போன்றுள்ளது 

வலது புறம் வேடுவ சிவனார் வில்லேந்தி காரின் தூக்கிய நிலையில் உள்ளார்  , வேடுவ சிவனாரும், அர்ஜுனரும் போரிட்டு கொள்ளும் காட்சிகள் வெகு நுணுக்கமாக இக்கோவிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன 

இது தவிர்த்து பிச்சையுகும் பெருமான், சண்டிகேஸ்வரர், போன்ற புராண கதைகளின் தொடர் சிற்பங்களும் அக்கோவிலில் உள்ளன 

ஒரு புராண நிகழ்வினை இலக்கியங்கள் மூலமும் அரிந்த ஒரு நிகழ்வினை பல தலைமுறைகளுக்கு அதனை நிலைத்து நிற்கும் வண்ணம் சிற்பங்கள் மூலமும் கண்ணெதிரே காட்சிபடுத்திவிட்டனர் போலும் 

Comments

Popular posts from this blog

பட்டினப்பாலை காட்டும் தமிழரின் வணிகம்

கற்றல் நன்றே

சோழபுரம்- தமிழகத்தின் முதல் பள்ளிப்படை