சோழபுரம்- தமிழகத்தின் முதல் பள்ளிப்படை

காலம் எத்துணை கோரமானது என்றால் உலகையே கட்டியாண்ட மாமன்னனை கூட உரு தெரியால் அழித்து விடக்கூடியது 

மன்னர்களுக்கே இந்நிலையென்றால் அவர்களின் கோநகர்கள் மட்டும் நிலைத்திருக்குமா என்ன..?

உலகெங்கும் தமிழக முத்துக்களையும், வாசனை திரவியங்களையும், கொண்டு சேர்த்து தமிழகத்தை தேடி ரோமானியரையும், கிரேக்கரையும், சீனரையும் ஓடிவரச்செய்த காவிரிபூம்பட்டிணம், கொற்க்கை, முசிறி போன்ற உலகப்புகழ் பெற்ற துறைமுகப்பட்டிணங்கள் கண்ணுக்கு தெரியாமல் காற்றோடு கலந்தது காலத்தின் கோர விளையாட்டே இதே காலத்தின் விளையாட்டால் தன் பெருமைகளை இழந்த ஊர் தான் சோழபுரம் தமிழகம் முழுதும் ஒரே கொடையின் கீழ் ஆட்சி புரிந்த சோழர்கள் தங்களின் பெயரில் பல ஊர்களையும் வளநாடுகளையும் உருவாக்கினர் ஏற்கனவே இருந்த ஊர்களுக்கும் கூட பெயர் மாற்றம் செய்தனர்...

சோழபுரம் இந்த பெயரில் தமிழகம் முழவதும் பல சிற்றூர்கள் இருந்தாலும் வேலூர் அருகேயுள்ள சோழவரம் எனும் இயற்கை எழில் கொஞ்சும் தற்போதைய சிற்றூர் 9ம் நூற்றாண்டு முதலே சிறப்புடன் இருந்துள்ளது,  சோழவரம் பல்லவர் காலத்தில் இவ்வூர் படூவூர் கோட்டத்து பங்காள நாட்டு பிரிவிலும், மாமன்னர் ராச ராசன்சோழர் காலத்தில் செயம் கொண்ட சோழ மண்டலத்து பங்காள நாட்டு வன்முகையூர் கூற்றம் எனும் பிரிவிலும் இருந்துள்ளது  இவ்வூரின் பல்லவர் காலம் தொட்டே சிறப்புடன் விளங்கியது.. தற்போது தமிழகத்திலுள்ள பள்ளிப்படை கோவில்களில் காலத்தால் பழமையானது (இறந்துபட்ட நபரின் நினைவாக கட்டப்படுவது) இவ்வூரில் தான் உள்ளது அக்கோவில் 

கம்பவர்ம பல்லவனின் கீழ்ச்சிற்றரசனாய் விளங்கிய கங்க மன்னன் ப்ரித்திவி கங்கரையரின்  மகனான ராஜாஜித்தன் என்பவன் பள்ளிப்படை கோவில் எழப்பித்தான் என்று கல்வெட்டுக்கள் பகருகின்றன..இவ்வூரில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இதுவே பழமையானது இதன் காலம் கி.பி 856 ஆகும் இக்கல்வெட்டு காலத்தால் சிதைந்துவிட்டது

இதேயூரில் உள்ள குணமாலை பெருமாள்  கோவிலுக்கும் கம்ப வர்மனின் ஆட்சியில் தானம் அளிக்கப்பட்டது அக்கல்வெட்டில் இவ்வூர் காட்டுத்தும்பூர் என்று அழைக்கப்பட்டுள்ளது இவ்வூரில் காட்டுத்தும்பை பூக்கள் அதிகம் விளைந்த காலத்தால் இவ்வூர் இப்பெயர் பெற்றது போலும் இப்பூக்களையே இறைவனுக்கு செலுத்தவும் 

தானம் அளிக்கப்பட்டது

மேலும் இவ்வூரில் உள்ள கல்லாங்குட்டை என்று தற்போது அழைக்கப்படும் குளத்தில் காணப்படும் இராட்டிட கூட மன்னான மூன்றாம் கிருஷ்ணன் கன்னாரதேவன் கல்வெட்டு ஒன்று தக்கோலம் போரில் இவர் சோழமன்னன் இராராஜித்தனை வென்று தொண்டை நாட்டை வென்ற செய்தியை பறைசாற்றுகிறது இதில் கன்னாரதேவன் " ராசாதித்தனை எறிந்து தொண்டை மண்டலம் புகுந்தவர்" என்று சிறப்பிக்கபடுகின்றான் மேலும் இக்கல்வெட்டு கள்ளிநங்கை எனும் பெண்ணின் நினைவாக இக்குறள் வெட்டப்பட்ட செய்தியைக்கூறுகின்றது ஹச்கள்ளிநங்கை குளம் என்பதே தற்போது கல்லாங்குட்டை என்று காலமாற்றாத்தால் மருவி விட்டது

மேலும் மற்றோர் கன்னார தேவன் கல்வெட்டு இவ்வூர் சிவனின் பெயரை '"நந்தி கம்பேஸ்வரர்" என்று குறிப்பிடுகின்றது இச்சிவாலயம் பல்லவமன்னன் கம்பவர்மன் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டதினால் அம்மன்னனின் தந்தையான மூன்றாம் நந்திவர்மனின்(தெள்ளாறெரிந்த நந்தி வர்மன், நந்திகலம்பக பாட்டுடைதலைவன்) பெயரையும் கம்பவர்மன் பெயரையும் இணைத்து நந்திகம்பேஸ்வரர் என்று அழைக்கப்பட்டுள்ளார் 

இதே பெயரிலேயே மாமன்னர் இராச இராசன் காலம் வரை இவ்வூரும் இவ்வூர் இறைவனும் அழைக்கப்பட்டுள்ளனர் ஆனால் அவரின் 27ம் ஆட்சியாண்டு முதல் காட்டுத்தூம்பூர் எனும் பெயரை "உய்யக்கொண்டான் சோழபுரம்"  என்றும் நந்திகம்பேஸ்வரர் என்ற இறைவன் பெயரை இராச இராசஸ்வரர் என்று மாற்றிவிட்டார்…மாமன்னன்  இராச இராசனின் பெயரால் அமைந்த ஒரு சில கோவில்களில் இதுவும் ஒன்று

மேலும் ஒரு கல்வெட்டில் "உடையார் இராசேந்திர சோழீஸ்வரமுடைய நாயனார்"

என்று குறிப்பிடுகிறது போலும் ஆனால் இக்கல்வெட்டு  முழுமையாக கிடைக்கப்படவில்லை இதில் குறிப்பிடப்படும் இறைவன் சோழபுரத்து சிவன் தான் என்பதையும் உறுதியாக கூறவியவில்லை ஏனென்றால் மாமன்னன் இராசேந்திர சோழனுக்கு பின் ஆட்சிக்கு வந்த முதலாம் குலோத்துங்க சோழரின் கல்வெட்டுடில் சோழபுர்தது சிவன் இராச இராசஸ்வரர் என்று தான் குறிக்கப்படுகின்றார்… 

மேலும் இவ்வூரில் உள்ள பிடாரிக்கோவிலில் (காளியம்மன்) சப்த மாதர் சிற்பங்களுடன்  மேலும் சில சிற்பங்களும் உள்ளன..

வரலாற்று சிறப்புமிக்க இவ்வூரின் பெருமைகள் அவ்வூர் மக்களுக்கே தெரியவில்லை.., பல்லவரின் கட்டுமானத்தை கப்பீரமாய் தாங்கி நிற்க்கும் பல்லவர்கே உரித்தான பல சிம்மத்தூண்கள் அதன் அருமை தெரியாமல் சிதைக்கப்பட்டும், சிமெண்ட் சிறைக்குள் சிக்கிககொண்டும் உள்ளன.., பெருமவாய்ந்த நந்திகம்பேஸ்வர்/ராசராசேஸ்வரர்/ராசேந்திர சோழிஸ்வரர்  நிலையோ படுமோசமாய் உள்ளது வரலாற்று சிறப்புமிக்க கோவில் கால ஓட்டத்தில் சிதைக்கப்பட்டு, சிற்பங்களும், கல்வெட்டுகளும், கற்றூண்களும் கோவில் முழுவதும் சிதறிக்கிடக்கின்றது.. 

இடிந்து கிடந்த கோவில் சில ஆண்டுகளாய் மெதுவாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.. புதுப்பித்தலின் போது பல கல்வெட்டுகள் பாழ்ப்பட்டு விட்டன…

குணமாலை பெருமாள் கோவிலும் சரியான வழிபாடு இல்லாமல் மூடியே கிடக்கின்றது 

வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற தற்போதைய சோழவரம் எனும் சிற்றூர் போற்றி பாதுகாக்க வேண்டிய கலைச்செல்வம், சோழபுரம், பல்லவரும்,சோழரும் நமக்கு அளித்த வரம் இவ்வூர் போன்றே பல ஊர்களில் நம்முன்னோர் நமக்களித்த பல வரலாற்று சிறப்புமிக்க சின்னங்களை என்னவென்றே தெரியாமல் அழித்து கொண்டுள்ளோம் நம்முன்னோர்  நமக்களித்த சிறப்புகளை வரும் தலைமுறைக்கு அளிப்போம், அதன் வரலாற்றை சொல்லி தருவோம்



வெ.கண்ணன்

Comments

Post a Comment

Popular posts from this blog

பட்டினப்பாலை காட்டும் தமிழரின் வணிகம்

கற்றல் நன்றே