இந்தளூர் கோழி நடுக்கல்

தமிழகத்தில்  சங்க காலம் தொட்டே போரிலோ அல்லது வேறு ஏதேனும் வீரச்செயலில் ஈடுப்பட்டு வீரமரணம் அடைந்த நபர்களுக்கு அவரின் செயலை நினைவு கூறும் வகையில் நினைவுக்கற்கள் எழுப்பட்டுள்ளன 

"காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்

சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல் என்று

இருமூன்று வகையிற் கல்லொடு புணர"

என்ற தொல்காப்பிய தொடர்கள் நடுக்கல் எவ்வாறு அமைய‌ வேண்டும் என்றும், அதில் அவ்வீரனின் புகழ் பொறிக்கப்பட்டு வழிப்படப்பட்டுள்ளது என்று மேற்ச்சொன்ன தொல்காப்பிய வரிகள் மூலம் அறியலாம்

மேலும் சங்க கால கடையேழு வள்ளள்களின் ஒருவனான அதியமான் நெடுமான் அஞ்சியின் மரணத்திற்க்கு பின் பாடிய புறநானூற்றுப்பாடல் ஒன்றில் நடுக்கல் பற்றி குறிப்பிடுகின்றார் அப்பாடல் பின்வருமாறு 

 "இல்லாகியரோ காலை மாலை

அல்லாகியர் யான் வாழும் நாளே

நடுகல் பீலி சூட்டி நார் அரி

சிறு கலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ

கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய

நாடு உடன் கொடுப்புவும் கொள்ளாதோனே" (புறம்- 232)

தன் நாட்டையே பிறர் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளாத இந்நெடுமான் அஞ்சி அவனுக்கு நடுக்கல் எழுப்பி அக்கல்லில் மயிலிறகு சொறுகி இனிய சுவையையுடைய  கல்லையோ அல்லது பழச்சாற்றையோ வைத்து வழிப்பட்டால் மட்டும் ஏற்று கொள்வானோ..? என்று சங்க கால ஔவை பாடும் விதமாய் அமைந்த பாடல் இது…

இப்படி சங்க காலம் முதலே நடுக்கல் எடுக்கப்படுவதும் வழிபடுவதும் இருந்து வந்துள்ளது இவ்வழிபாட்டு முறையே இன்றைய சிலை வழிப்பாட்டின் முன்னோடி எனலாம்

இவ்வாறனா நடுக்கற்கல் மனிதர்களுக்கு மட்டும் எழுப்பட்டுள்ளனவா என்றால் இல்லை

இயற்கை வழிபாட்டு முறைமையை முதன்மையாக கொண்டிருந்த தமிழர்கள் பிற உயிர்களையும் தம்முயிராய் கருதினர் 

அதன் காரணமாக தான் தான் உயிருக்குயிராய் வளர்த்த நாயிக்கும், சேவலுக்கும் கூட நடுக்கல் அமைத்துள்ளனர்

இந்தளூர்

இவ்வூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம் மற்றும் மேல்மருவத்தூர் இடையே அமைந்துள்ளது தமிழகத்தில் இதுவரை இரண்டு கோழி நடுக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதில் ஒன்று இவ்வூரிலும் மற்றொன்று விழூப்புரத்திலும் உள்ளது

இவ்வூரில் உள்ள சிவாயத்திலுள்ள விஷ்ணு சிலை பல்லவர் காலத்தை சேர்ந்தது இதன்‌ மூலம் பல்லவர் காலத்தில் இவ்வூர் சிறப்புடன் இருந்தது எனலாம், கோவிலும் பழமையை மறந்து புதுப்பிக்கப்பட்டு விட்டது

பொற்கொற்றி :

இவ்வூரில் உள்ள கோழி நடுக்கல் காலத்தால் மிகவும் சிதைந்து விட்டது


இந்நடுக்கல்லில் இக்கோழியின் பெயர் பொற்கொற்றி என்றும் இவ்வூரின் பெயரை கீழைச்சேரி என்றும் குறிக்கப்படுகிறது

 இக்கல்வெட்டு கி.பி. ஆறாம் நூற்றண்டை சேர்ந்து , இது தமிழியும் வட்டெழுத்தும் சேர்ந்த எழுத்தமைதியில் உள்ளது

இந்நடுக்கல் கோழிச்சண்டையிலோ அல்லது வேறு வகையிலோ இறந்த கோழிக்கு அதனை அன்புடன் வளர்த்தவரால் எடுக்கப்பட்டிருக்கும் 

நடுக்கல்லில் அமைந்த கல்வெட்டில் உள்ள எழுத்தின் மாதிரிப் படம் ( ர.பூங்குன்றன் அவர்களின் நடுக்கல் கல்வெட்டுகள் புத்தகம்)

கல்வெட்டு விளக்கம்

கீழை சேரிக் கோழிபொ

ற் கொற்றி

கீழைச்சேரியை சேர்ந்த கோழி பொற் கொற்றி என்பது இதன் விளக்கம் 

இந்நடுக்கல் இவ்வூர் மக்களால் கோழிக்கல் என்றும் ராஜாக்கல் என்றும் அழைக்கப்படுகிறது


தகவல்கள்: திரட்டியவை

எழுத்து : வெ.கண்ணன்

Comments

Popular posts from this blog

பட்டினப்பாலை காட்டும் தமிழரின் வணிகம்

கற்றல் நன்றே

சோழபுரம்- தமிழகத்தின் முதல் பள்ளிப்படை