பல்லாவரம் பல்லவர் குடைவரை
மகேந்திரவர்மரின் மண்டகப்பட்டு பல்லவ கிரந்த கல்வெட்டு குடைவரைகள் - பாறைகளை குடைந்தெடுத்து கோவில்களையோ, மண்டபங்களையோ உருவாக்குவதின் பெயர் தான் குடைவரைகள் இக்கலை வடத்தமிழக்த்தில் பல்லவர்களாலும் தென் தமிழ்கத்தில் பாண்டியர்களாலும் அறிமுப்படுத்த பட்டது பல்லவ பேரரசன் முதலாம் மகேந்திரவர்மன் (கிபி 600 - 630 ) இக்குடவரைக்கலையை விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு எனுமிடத்தில் அறிமுகப்படுத்துகின்றான் இக்குடைவரையிலுள்ள கல்வெட்டில் சிவ, விஷ்ணு , பிரம்மாவுக்கு அழியக்கூடிய சுதையாலும், உலோகத்தாலும் , சுண்ணாம்பாலும் கட்டாமல் விசித்ர சித்தன் பாறையால் குடைந்து எழப்பிய குகைக்கோவில் எனும் பொருட்படும் பல்லவ கிரந்த கல்வெட்டு அமைந்துள்ளது மண்டகப்பட்டை போன்றே இப்பல்லவ மன்னன் மாமண்டூரிலும் அதனைத்தொடர்ந்து சென்னையிலுள்ள பல்லவாரத்திலும் (பல்லவபுரம்) குடைவரைகளை எடுப்பித்தார் பல்லாவரம் தன் பெயரிலேயை பல்லவனைச்சுமக்கும் இவ்வூரில் கண்டெடுக்கபட்ட கற்கோடாரிகளை கொண்டே இந்தியாவில் பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்று ஆங்கிலையே ஆராய்சியார்களால் இந்திய தொல்லியல் தேடல்களுக்கு தொட...