பல்லாவரம் பல்லவர் குடைவரை


மகேந்திரவர்மரின் மண்டகப்பட்டு பல்லவ கிரந்த கல்வெட்டு
குடைவரைகள் - பாறைகளை குடைந்தெடுத்து கோவில்களையோ, மண்டபங்களையோ உருவாக்குவதின் பெயர் தான் குடைவரைகள் 

இக்கலை வடத்தமிழக்த்தில் பல்லவர்களாலும் தென் தமிழ்கத்தில் பாண்டியர்களாலும் அறிமுப்படுத்த பட்டது 
பல்லவ பேரரசன் முதலாம் மகேந்திரவர்மன் (கிபி 600 - 630 ) இக்குடவரைக்கலையை விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு எனுமிடத்தில் அறிமுகப்படுத்துகின்றான் 



இக்குடைவரையிலுள்ள கல்வெட்டில் சிவ, விஷ்ணு ,  பிரம்மாவுக்கு அழியக்கூடிய சுதையாலும், உலோகத்தாலும் , சுண்ணாம்பாலும் கட்டாமல் விசித்ர சித்தன் பாறையால் குடைந்து எழப்பிய குகைக்கோவில் எனும் பொருட்படும் பல்லவ கிரந்த கல்வெட்டு அமைந்துள்ளது



மண்டகப்பட்டை போன்றே இப்பல்லவ மன்னன் மாமண்டூரிலும் அதனைத்தொடர்ந்து சென்னையிலுள்ள  பல்லவாரத்திலும் (பல்லவபுரம்) குடைவரைகளை எடுப்பித்தார்

பல்லாவரம் 

தன் பெயரிலேயை பல்லவனைச்சுமக்கும் இவ்வூரில்  கண்டெடுக்கபட்ட கற்கோடாரிகளை கொண்டே இந்தியாவில் பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்று  ஆங்கிலையே ஆராய்சியார்களால் இந்திய தொல்லியல் தேடல்களுக்கு தொடக்கப்புள்ளி இடப்பெற்றது இப்பல்லாவரத்தின் வரலாறு பழங்கற்காலத்திலேயே தொடங்கிவிட்டது மேலும் சில ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட சங்க காலத்தை சேர்ந்த ஈமப்பேழைகள் சங்க காலத்திலும் இவ்வூரின் பெருமை தொடர்ந்தை அறியலாம் அதனிமும் சிறப்பாக பல்வர்களின் குடைவரை இங்கு எடுப்பிக்கப்பட்டுள்ளது இவ்வூர் பல்லவர் காலத்திலேயே பல்லவபுரம் எனும் பெயர் பெற்றிருக்க வேண்டும் பழம்பெருமைமிக்க இவ்வூரின் பெயர் திரிசூலத்திலுள்ள  முதலாம் குலோத்துங்க சோழரின் கல்வெட்டுகளில் " பல்லவபுரமான" எனும் பெயரைத்தாங்கியே வருகின்றது 
இன்றும் பலவிடங்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் பல்லாவரத்தை சுற்றியுள்ளது காஞ்சியை கோ நகராய் ஆட்சி செய்த பல்லவர்களுக்கு  மயிலாப்பூர் மணிமங்களம் போன்றவிடங்களும் முக்கியத்துவம் கொடுத்துனர் அதே போன்று இன்றைய பல்லாவரமும் முக்கியமான நகராய் பல்லவர் ஆட்சியில் விளங்கியிருக்க வேண்டும்

பல்லவர் குடைவரை 

மகேந்திர வர்மரின் மற்ற  குடைவரைகளை காட்டிலும் பல்லாவரம் பஞ்சபாண்டவ மலையில் உள்ள இக்குடைவரை சிறப்பானது , பொதுவாக குடைவரைகள் மூன்று பாகங்களாக (அறைகளாய்) அமைந்திருக்கும் ஆனால் தென்திசை நோக்கி அமைந்த இக்குடைவரை ஐந்து பாகங்களாய் (அறைகள்) பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது மூன்று பாகங்கள் மும்மூர்த்திகளுக்கும் மற்ற இரண்டு பாகங்கள தூவர பாலகர்களுக்காவும் அமைக்கப்பட்டிருக்கலாம் 

( இந்திய தொல்லியல் கழகம் வெளியிட்ட புத்தகத்தில் வெளியிடப்பட்ட பல்லாவரம் குடைவரையின் படம்)

இக்குடவரையின் முகப்பு பகுதியில் இக்குடைவரையை உருவாக்கிய மகேந்திரவர்ம பல்லவரின் பட்ட பெயர்களான 

மத்தவிலாசன்  (மகேந்திர வர்மர் எழுதிய நகைச்சுவை நாடகத்தின் பெயர்) 

சித்திரகார புலி (கலைகளில் புலிப்போன்றவன்)

சங்கீரண கதி (இசையில் சிறந்தவன்)

சத்ருமல்லன் ( எதிரிகளிடம் மல்யுத்தம் (போர் /செய்பவன் )

அவனிபாஜன்

போன்ற பெயர்களும் இடம்பெற்றிருந்ததாக இந்திய தொல்லியல் துறையின் ஏடுகள் கூறுகின்றன

ஆனால் தற்போது மசூதியாக மாற்றப்பட்டு விட்ட இக்குடைவரையில் அக்கல்வெட்டுகள் அழிக்கப்ட்டுவிட்டன என்பது வருந்ததக்கது குடைவரையின் தூண்களில் கூட அழகிற்கா(?) வண்ண ஒடுகள் ஒட்டப்பட்டு அதன் பழமை மறைக்கபட்டுவிட்டது மேலும் நடுவில் உள்ள பகுதியில் ஆவூடையாருக்கான இடத்தில் கைப்போன்ற  
அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது 


இந்த குடைவரையின் பின்புறம் இருந்த மலையும் குவாரிகளால் சீர் குலைக்கப்பட்டுவிட்டது எஞ்சியுள்ள இந்த குடைவரையும் மசூதியாக மாற்றப்பட்டதால் தப்பியுள்ளது மேலும் குடைவரையின் இடதுப்புறத்தில் பாறையின் தன்மையை சோதிக்கவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சதுரவடிவில் பாறைகள் குடையப்பட்டுள்ளது இதே போன்ற அமைப்புகள் மாமல்லபுரத்தில் உண்டு


மகேந்திர வர்மன் எனும் கலை ரசிகன் மற்றும் கலைஞனின் அற்புதப்படைப்பு இந்த பல்லாவரம் பஞ்சபாண்டவர் குடைவரை ஏற்கனேவே கிட்டதட்ட மறக்கடிக்கப்பட்ட இந்த கலைச்சின்னத்தின் பெருமை அனைவரும் அறியத்தக்கன மகேந்திர வர்மரின் எந்த குடைவரையை காட்டிலும இக்குடைவரை தனிச்சிறப்பு மிக்கது ஏனெனில் மும்மூர்த்திகளுக்கு எடுப்பிக்கபட்ட இக்குடைவரை வேற்று சமயத்தால் வழிப்பாட்டில் இருப்பது சிறப்பெனினும் வரலாற்று ஆர்வலர்களால் எளிதில் இக்குடைவரைக்கு செல்ல முடிவதில்லை இக்கலைச்சின்னம் வேற்று மதச்சின்னமாய் மாற்றம் பெற்றாலும் வரலாற்று ஆர்வலர்களையும் இதைக்காண அனுமதிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்

வெ.கண்ணன்

Comments

Popular posts from this blog

பட்டினப்பாலை காட்டும் தமிழரின் வணிகம்

கற்றல் நன்றே

சோழபுரம்- தமிழகத்தின் முதல் பள்ளிப்படை