கம்ப வர்மன் கால தா.வேளூர் நடுக்கல்
காதலையும் வீரத்தையுமே இரு கண்களாய் பாவித்து வாழ்ந்த தமிழர்கள் போரிலோ அல்லது ஏதேனும் பூசலிலோ வீரச்செயல் புரிந்து உயிர் நீத்த வீரர்களுக்கு நினைவுக்கல் எழுப்பி வழிப்பட்டுள்ளனர் இதை வீரக்கல், நடுக்கல் என்றும் வழங்குவர்… தமிழகத்தில் அதிக அளவில் நடுக்கற்கள் செஞ்சி, சேலம், பகுதிகளில் கிடைக்கின்றன நடுக்கற்கள் மனிதர்களுக்கு மட்டும் அல்லாது சேவலுக்கும், நாய்களுக்கு கூட எடுக்கபட்டுள்ளது, நடுக்கற்கள் பெரும்பாலும் காட்டு மிருங்களுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த வீரனுக்கும், ஆநிரைகளை கவரும் பொருட்டோ, அல்லது கவர்ந்த ஆநிரைகளை மீட்க்கும் பொருட்டோ நிகழ்ந்த போரில் வீரமரணம் அடைந்த வீரனுக்கோ நடுக்கற்கல் எழுப்பட்டுள்ளன ஆனால் தற்போதைய திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள தா.வேளூர் எனுமிடத்தில் பல்லவ மன்னன் கம்ப வர்மன் காலத்தில் எடுக்கப்பட்ட நடுக்கல்லானது கள்வர்களால் கடத்தபட்ட பெண்ணை மீட்க நடந்த போரில் அப்பெண்ணை மீட்டு வீர மரணமடைந்த வீரனுக்கு எடுக்கப்பட்டுள்ளது அந்நடுக்கல்லின் நகல் படி இதோ நடுக்கல்லில் உள்ள கல்வெட்டின் எழுத்துகளின் அமைப்பு அதன் வரி படியே அமைத்து கீழே தரப்பட்டுள்ளது 1....