ஐ தந்த திருநாதர் குன்று
சமண மதம் வைதிக மதத்தின் எழுச்சிக்கு பின்பு குன்றுகள் சூழ்ந்த நடுநாட்டிலும் மதுரையிலும் தஞ்சம் புகுந்து மெல்ல வளர்ந்துள்ளது வந்துள்ளது இன்றும் தமிழத்தின் பிற பகுதிகளை காட்டிலும் அப்பகுதிகளில் தான் சமணர் அதிகம் வாழ்கின்றனர் முக்கியமாக திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியில் பலவிடங்களில் சமணர் கற்படுகைகளும் கற்சிலைகளும் மிகுந்து காணப்படுகின்றது சமணர்களின் கற்படுகைகளின் அருகில் பொதுவாக அப்படுகைகளை தானமாய் செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாய் பொறிக்கப்பட்டிருக்கும் அவ்வாறு செஞ்சி முழுவதும் கல்வெட்டுகளும் சிற்பங்களும் இருந்தாலும் செஞ்சியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள திருநாதர் குன்று என்ற பெயருடைய சமணர் வாழ்விடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது சமணர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் அறிந்து கொள்ள வேண்டிய சிறப்பு மிக்க ஒரு தடத்தை கொண்டது இத்திருநாதர் குன்று ஐ என்னும் எழுத்து பொறித்த கல்வெட்டு முதன்முதலில் இத்திருநாதர் குன்றில் தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது (படம்: திருநாதர் குன்று கல்வெட்டில் ஐ எனும் எழுத்து ) கி.பி 5ம் நூற்றாண்டை சேர்ந...