தென்சேந்தமங்கலம் சமணர் ஆலயம்

கடைசங்க காலம் தொடங்கி, களப்பிரர் காலம் கடந்து , பல்லவர் காலத்தில் தமிழகெங்கும் பரந்திருந்த சமணம், பல்லவ மன்னன் மகேந்திர வர்மன்  சைவ சமயத்ததை தழுவிய பின் , மேலும் சைவ, வைணவ சமயத்தின் எழுச்சிக்கு பின் சமண சமயம் தொண்டை நாட்டை விட்டு மலைகள் சூழ்ந்த நடுநாட்டில் பரவியது அன்று பரவிய சமணத்தின் தாக்கம் இன்றும் திருவண்ணாமலை மாவட்டத்திலும், செஞ்சியை சுற்றியும்  காணப்படுகின்றது

இவ்விடங்களில் பலவூர்களில் வீழ்ந்து கிடந்த சமண மதத்தின் பழந்தடயங்கள் இன்றும் பழங்கோவில்களை புதுப்பித்தும்,பழஞ்சிற்பங்களை கொண்டு புதிய கோவில்களை எடுப்பித்தும் சமண சமயத்திள்க்கு புத்துயிர் அளித்து வருகின்றனர்

அவ்வாறமைந்த சிறு சமணர் ஆலயம் தான் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்திலுள்ள தென்சேந்தமங்கலத்திலுள்ள பார்சுவநாதர் ஆலயம் 

இவ்வூர் வந்தவாசியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

தென்சேந்தமங்கலத்திலுள்ள பார்சுவநாதர் ஆலயம்  23வது தீர்த்தங்கரரான பார்சுபதநாதருக்காக எழுப்பபட்டுள்ளது 


இக்கோவிலின் கொடிமரத்தினை சுற்றியும், கோபுரங்களிலும் சமண தீர்த்தங்கரர்களின் சிறப்பங்கள் காணப்படுகின்றது

மேலும் ஒரு தனியறையில் ஏறக்குறைய 10ம் நூற்றாண்டை சார்ந்த பார்சுபதநாதர் சிலையும், மகாவீரர் சிலையும் ஒரு தர்மசாஸ்தா சிலையும் உள்ளது 


இந்த மகாவீரர் சிலை இவ்வூருக்கு அருகிலுள்ள காரணை என்ற ஊரிலுள்ள ஏரியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது (இவ்வூரிலும் சமணர் ஆலயம் இருந்து அழிந்துவிட்டது என்று ஊரார் கூறுகின்றனர்)

சிதைந்திருந்த தென்சேந்தமங்கலத்திலுள்ள சமணர்  ஆலயத்தை   இவ்வூரை சேரந்த சமணர்களும் மற்றும் சிலரும் புதுப்பித்துள்ளனர்

சில வருடங்களுக்கு முன்பு இவ்வூரை சேர்ந்த மருதேவி என்ற அம்மையார் சல்லேகனை (உண்ணா விரதம்) நோம்பு நோற்று இறந்துள்ளார் 

அந்த அம்மையார் நினைவாக கல்லறை ஒன்றும் எழுப்பபட்டுள்ளது


சாதிய பாகுபாடுகளை கொண்ட வைதிக மதத்தினை தீவிரமாக எதிர்த்த சமண மதமும் சாதிய பாதுபாடுகளை கொண்டது என்று இந்த தென்சேந்தமங்கலத்திலுள்ள ஆலயத்திற்க்கு சென்றப்பின்பு அறிந்து கொண்டேன் சதாரணமாய் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை

என் சாதியை கேட்டரிந்த பின்பே எனக்கு அனுமதி கிடைத்தது இத்துணைக்கும் நான் பக்கத்து ஊரை (காரணை) சேரந்தவன் என்ற போதும் என் உறவினர்களின் பெயரை கூறியப்பின்பே அனுமதிக்க பட்டேன்

வெ.கண்ணன்

Comments

Popular posts from this blog

பட்டினப்பாலை காட்டும் தமிழரின் வணிகம்

கற்றல் நன்றே

பல்லாவரம் பல்லவர் குடைவரை