ஐ தந்த திருநாதர் குன்று
முக்கியமாக திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியில் பலவிடங்களில் சமணர் கற்படுகைகளும் கற்சிலைகளும் மிகுந்து காணப்படுகின்றது
சமணர்களின் கற்படுகைகளின் அருகில் பொதுவாக அப்படுகைகளை தானமாய் செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாய் பொறிக்கப்பட்டிருக்கும்
அவ்வாறு செஞ்சி முழுவதும் கல்வெட்டுகளும் சிற்பங்களும் இருந்தாலும்
செஞ்சியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள திருநாதர் குன்று என்ற பெயருடைய சமணர் வாழ்விடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது சமணர்களுக்கு மட்டுமின்றி
அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் அறிந்து கொள்ள வேண்டிய சிறப்பு மிக்க ஒரு தடத்தை கொண்டது இத்திருநாதர் குன்று
ஐ என்னும் எழுத்து பொறித்த கல்வெட்டு முதன்முதலில் இத்திருநாதர் குன்றில் தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது
(படம்: திருநாதர் குன்று கல்வெட்டில் ஐ எனும் எழுத்து)
கி.பி 5ம் நூற்றாண்டை சேர்ந்த இக்கல்வெட்டு முந்துதமிழ்(தமிழி) எழுத்திலிருந்து வட்டெழுத்து எழுத்து வடிவிற்க்கு மாறும் எழத்தமைதியை கொண்டது
கல்வெட்டு விளக்கம்:
ஐம்பத்தேழன
சனந்நோற்ற
சந்திரநந்தி ஆ
சிரிகரு நிசிதிகை
இத்திருநாதர் குன்று கல்வெட்டு சந்திர நந்தி எனும் சமண ஆசிரியர் ஐம்பத்தேழு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்த செய்தியை கூறுகின்றது
மேலும் இத்திருநாதர் குன்றிலுள்ள மற்றொரு 9ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு 30 நாட்கள் மற்றொரு துறவி உண்ணாவிரமிருந்து உயிர்நீத்த தகவலை கூறுகின்றது
மற்றொரு சிறப்பாக இத்திருநாதர் குன்றில் தமிழகத்தில் மிகவும் அறிதாக காணப்படும் ஒரே இடத்தில் 24 சமண தீர்த்தங்கரர்களின் புடைப்பு சிற்பங்களும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டுள்ளது இச்சிற்பங்கள் 9ம் நூற்றாண்டை சேர்ந்தவை
மற்றோரு பாறையில் பார்சுவநாதரின் புடைப்பு சிற்ப்பமும் காணப்படுகின்றது
திருநாதர் குன்றில் சிதைந்த
( சிதைக்கப்பட்ட) நிலையிலுள்ள ஒரு மகாவீரரின் சிலையும் உள்ளது
சமணர்கள் மட்டுமின்றி தமிழ் பேசும் மக்கள் அனைவரும் போற்றி பாதுகாக்க வேண்டிய வரலாற்று சின்னம் "திருநாதர் குன்று"
தகவல்கள் திரட்டியவை
எழுத்து : வெ.கண்ணன்
Comments
Post a Comment