ராஜராஜேஸ்வரம் சிவபுரம் - ஒரகடம்

சிவபுரம் இந்த ஊர் காஞ்சிபுர மாவட்டம் ஒரகடம் அருகேயுள்ள ஒரு சிற்றூர் இந்த ஊர் முதலாம் இராசேந்திர சோழரின் 12 ம் ஆட்சி ஆண்டு வரை உரோகடம் என்றும் 13 ம் ஆட்சி ஆண்டு முதல் சிவபுரம் என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது இவ்வூரில் உள்ள சிவாலயம் முழுவதும் கருங்கற்களால் அமைந்த ஒரு தள விமான அமைப்பையும் கொண்டது இந்த சிவாலயம் சோழ மாமன்னர் முதலாம் இராசராசன் ( 985 -1014 ) ஆட்சியின் 24 வது ஆண்டில் ஏற்கனவே இருந்த கோவிலை புதுப்பித்தோ அல்லது புதியதாகவோ கட்டப்பட்டுள்ளது ராஜராஜேஸ்வரத்தின் முகப்பு கோவிலின் கருவறை , முகமண்டபம் , ஆளுயர தூவர பாலகர்கள் என இராச இராசரின் தனித்துவ கட்டிட பாணியை தாங்கி நிற்கின்றன விமானமும் இராச இராசன் தன் பாட்டன் அரிஞ்சிய சோழருக்கு எடுப்பித்த பள்ளிப்ழடையின் விமான அமைப்பை நினைவூட்டுகின்றது விமானத்தின் அமைப்பு சோழர் கால எழில்மிகு கோட்ட சிற்பங்களும் , சண்டிகேஸ்வர் சிற்பங்களும் இக்கோவிலுக்கு இன்னும் அழகூட்டுகின்றன தேவக்கோட்ட சிற்பங்கள் மற்றும் சண்டிகேஸ்வர் சிற்பம் துவார பாலகர்கள் கல்வெட்டு தகவ...