Posts

வேடுவ சிவனும் அர்ஜுனனும் - கிராத அர்ஜுனா

Image
சிவனாரின் 64 வடிவங்களில் ஒன்று வேடுவ சிவ வடிவம் , க சிவபெருமானிடம் பாசுபதம் பெறுதல் பொருட்டு அர்ஜுனன் சிவனை நோக்கி தவம் கொண்டிருந்தார், அதனை கலைக்க எண்ணி துரியோதனன் முகாசுரன் என்ற அரக்கனை அனுப்பினார், அவ்வரக்கன் பன்றி வடிவில் தவத்தினை கலைக்க அர்ஜுனன் மீது பாய்ந்தார், இதனால் கோபமுற்ற அர்ஜுனன் வில்லால் அவ்வரக்கனை தாக்கினார், அதே சமயத்தில் மற்றொரு அம்பும் அவ்வரக்கன் மீது பாய்ந்தது, அவ்வம்பு வேடுவனாக வந்த பரம்பொருள் சிவபெருமானது, இரு அம்புகளும் சரியான நேரத்தில் அப்பன்றியை தாக்கின, இறந்த அப்பன்றி யாருடைய அம்பினால் இறந்தது என்று, பார்த்திபனுக்கும், வேடுவனாக வந்த சிவனாருக்கும், வாக்குவாதம் ஏற்பட்டு அது இறுதியில் மற்போர், விற்போராக மாறிற்று,  தனக்கு சமமாய் ஒருவர் போரிடுவதால் சந்தகமுற்ற அர்ஜுனன் தன்னுடன் போரிடுவது சாதாரண வேடுவன் இல்லை என்று உணர்ந்தார்  இருதியில் வேடுவனாக வந்த சிவபெருமான் இறுதியில் தன் சுய உருவினை பார்த்திபனுக்கு காட்டி பாசுபதம் அளித்தார்   இந்நிகழ்வு தேவரா திருப்பதிகங்களிலும் சிவபெருமானின் திருவிளையாடாலாக இடம்பெற்றுள்ளது  "பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுப...

முதலாம் பரமேஸ்வர பல்லவரின் சிற்றாம்பாக்கம் கல்வெட்டு

Image
காஞ்சியை கோ நகராய் கொண்டு தமிழகத்தினை ஆண்ட பல்லவர்கள் தங்கள் கல்வெட்டு சாசங்களில் சில கல்வெட்டுகளை தவிர்த்து பெரும்பாலும் சமஸ்கிருதத்தில் பல்லவ கிரந்த எழுத்தமைதியிலே தான் வெளியிட்டனர், எனவே பல்லவர்களால் தமிழில் வெளியிடப்பட்ட  கல்வட்டுகள் சிறப்பானதாக கருதப்படுகின்றன அவ்வகையில் திருவள்ளூர் மாவட்டம் சிற்றாம்பாக்கம் என்ற ஊரில் உள்ள கல்வெட்டானது பல்லவ மன்னர் முதலாம் பரமேஸ்வர பல்லவரின்   முதலாவது ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டுள்ளது அக்கல்வெட்டு   மன்னரது ஆட்சியாண்டினை முதலாவது என்று குறிப்பிடாமல் தலைத்த அதாவது முதலாவது  ஆட்சியாண்டினை  நேரடியாக குறிப்பிடாமல் தலைத்த என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது இவ்வகையில் சிறப்பானதாக கருதப்படுகின்றது, மேலும் முதலாம் பரமேஸ்வர பல்லவரால் எடுப்பிக்கப்பட கூரம் கற்கோவிலே  தமிழகத்தின் முதல் கற்கோவில் என்று கருதிய நிலையில், கூரம் கற்கோவிலுக்கு முன்பே அதாவது முதலாம் பரமேஸ்வர பல்லவரின் முதலாவது ஆட்சியாண்டிலேயே கருங்கற்களால் கோவில்கள் கட்டப்படாதக இக்கல்வெட்டு பகர்வதாக கூறுகின்றனர்  இவ்வகையிலும் இக்கல்வெட்டு சிறப்ப...

அபராஜித்தனின் வேலஞ்சேரி செப்பேடு

Image
வேலஞ்சேரி செப்பேடு தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான ஆவணம் , இச்செப்பேடு கிடைக்கும் வரை பல்லவ அரசர்களான கம்பவர்மன் , நிருபதுங்கவர்மன் , அபராஜித்தவர்மன் பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மனின் மகன்கள் தான் என்று அனைத்து வரலாற்று அறிஞர்களும் கருதினர் ஆனால் இந்த செப்பேடு தான் இந்த கருதுகோள்களை பொய்யாக்கியது செப்பேட்டின் அமைப்பு இந்த செப்பேடு இன்றைய திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள வேலஞ்சேரி எனுமிடத்தில் 1977 ம் ஆண்டு கண்டறியப்பட்டது , மொத்தம் ஐந்து ஏடுகளையும் , இந்த ஏடுகளை இணைக்கும் வளையத்தில் பல்லவர்களின் காளைச்சின்னமும் அதனை சுற்றி பல்லவ அரசன் அபராஜித்தன் மற்ற குல அரசர்களுக்கு விடுக்கும் ஆணை என்று பொறிக்கப்பட்டுள்ளது , வழக்கமான பிற்கால பல்லவர் செப்பேடுகளை போல் இந்த செப்பேடும் வட மொழி மற்றும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது வடமொழிப் பகுதியை பெரிய காவியங்களை எழுக்கூடிய ஶ்ரீகுமரனின் மகன் மகாதேவனும் , பல்லவரின் அரசு சின்னத்தை விடேல் விடுகு பெருங்கண்ணனும் , தமிழ் பகுதியை பொதினி மகாதேவபட்டனும் இந்த செப்பேட்டை காஞ்சியில் பிறந்த சிற்பி விஜயன்னாவும் செதுக்கியுள்ளார் இவர்களின் இந்த...

ராஜராஜேஸ்வரம் சிவபுரம் - ஒரகடம்

Image
சிவபுரம்  இந்த ஊர் காஞ்சிபுர மாவட்டம் ஒரகடம் அருகேயுள்ள ஒரு சிற்றூர் இந்த ஊர் முதலாம் இராசேந்திர சோழரின் 12 ம் ஆட்சி ஆண்டு வரை  உரோகடம்  என்றும் 13 ம் ஆட்சி ஆண்டு முதல்  சிவபுரம்  என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது இவ்வூரில் உள்ள சிவாலயம்  முழுவதும் கருங்கற்களால் அமைந்த ஒரு தள விமான அமைப்பையும் கொண்டது இந்த சிவாலயம் சோழ  மாமன்னர் முதலாம் இராசராசன்  ( 985 -1014 ) ஆட்சியின் 24 வது ஆண்டில் ஏற்கனவே இருந்த கோவிலை புதுப்பித்தோ அல்லது புதியதாகவோ கட்டப்பட்டுள்ளது     ராஜராஜேஸ்வரத்தின்      முகப்பு கோவிலின் கருவறை , முகமண்டபம் , ஆளுயர தூவர பாலகர்கள் என இராச இராசரின் தனித்துவ கட்டிட பாணியை தாங்கி நிற்கின்றன விமானமும் இராச இராசன் தன் பாட்டன் அரிஞ்சிய சோழருக்கு எடுப்பித்த பள்ளிப்ழடையின் விமான அமைப்பை நினைவூட்டுகின்றது  விமானத்தின் அமைப்பு சோழர் கால எழில்மிகு கோட்ட சிற்பங்களும் , சண்டிகேஸ்வர் சிற்பங்களும் இக்கோவிலுக்கு இன்னும் அழகூட்டுகின்றன தேவக்கோட்ட சிற்பங்கள் மற்றும் சண்டிகேஸ்வர் சிற்பம் துவார பாலகர்கள் கல்வெட்டு தகவ...

பல்லவர்களின் முதல் கல்வெட்டு - மஞ்சிக்கல்லு கல்வெட்டு

Image
களப்பிரர்களை வீழ்த்தி காஞ்சியை கைப்பற்றியவர்கள் எனக்கருதப்படும் பல்லவர்களின் ஆட்சி தொண்டை மண்டலம் தொடங்கி சோழநாடு வரை பரவியிருந்தது கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகள் தமிழகத்தின் வடப்பகுதியை  ஆண்ட பல்லவர்கள் தமிழக்திற்கு ஆற்றிய பணிகள் பல பல ஏரிகள் , கோவில்கள் , குடைவரைகள் போன்றவற்றை உருவாக்கினர் பல்லவர்கள் நமக்களித்த கலைச்செல்வங்களின் ஒன்றான காஞ்சி கைலாசநாதர் ஆலய கங்காதரர் வடதமிழகம் மற்றம் தெலுங்கானாவில் சில இடங்களில்   பல்லவர்கள் கல்வெட்டுகள் உள்ளன , ஆனால் இதுவரை பதிவு செய்யப்பட்ட பல்லவர் கல்வெட்டுகளில் காலத்தால் முதன்மையானது தெலுங்கானவிலுள்ள  குண்டூர் அருகிலுள்ள மஞ்சிக்கல்லுவில் கிடைத்த முற்கால பல்லவன் முதலாம் சிம்மவர்மனின் கல்வெட்டு சிம்மவர்மனின் மஞ்சிகல்லு கல்வெட்டு இந்த கல்வெட்டில் தன்னை பரத்வாஜ மாமுனியின் கோத்திரத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்தவன் என்று கூறிக்கொள்கின்றான் மேலும் இக்கல்வெட்டு இவ்வரசன் தன் சக்தியையும் தனக்கு வரக்கூடிய வரக்கூடிய நன்மைகளையும பெருக்கிக்கொள்ள கம்பளி போர்வைகளை பரிசளித்தைப்பற்றி கூறுகின்றது தகவல்கள்: Epigraphy Indica 32 ...

குணபதேயம் செப்பேடு - அரச குல பெண்கள் தானம் அளித்து பற்றி பகரும் முதல் ஆவணம்

Image
தமிழக வரலாற்றில்  பெண்களின் பங்கு அலாதியானது , சோழ அரசி செம்பியன் மாதேவி , லோகமாதேவி , குந்தவை நாச்சியார் போன்று பல அரச குல பெண்கள் , தானங்களை சாதரண குடிமகன் தொடங்கி , மிகப்பெரிய கோவில்கள் வரை தானங்கள் வழங்கியுள்ளனர் இவற்றை தமிழகமெங்கும் உள்ள  கல்வெட்டுகளும் , பலசெப்பேடுகளும் பகர்கின்றன , இவ்வகையில் காலத்தால் முற்பட்டது , முற்கால பல்லவ இளவரசன் விஜய புத்தவர்மனுடைய மனைவி சாருதேவியினுடையது (கி.பி 350) (செப்பேட்டினை இணைக்கும் வளையம் இதில் பல்லவர்களின் சின்னமான காளையின் உருவம் உள்ளதாய் குறிப்புகள் உள்ளன )  மொத்தம் மூன்று ஏடுகளில் பதினாரு வரியில் பிராகிருத மற்றும் சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ள இந்த செப்பேடு , தற்போது இலண்டன் அருங்காட்சியத்தை அலங்கரித்து கொண்டுள்ளது  செப்பேட்டின் தகவல்கள் ஶ்ரீ விஜயஸ்கந்தவர்மனுடைய ஆட்சியில்  யுவமகராஜனும் , பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்த பல்லவர் வம்சத்தை சேர்ந்த ஶ்ரீவிஜயபுத்தவர்மனுடைய மனைவியின் சாருதேவியின் கட்டளை ராஜதாடாகத்தின்.அருகேயுள்ள குடிநீர் கிணற்றின் வலதுபுறம் தற்போது பயிரிட்டு கொண்டிருக்கும் நிலத்தை  மஹாதரகம் எனும் ஊர...

பல்லாவரம் பல்லவர் குடைவரை

Image
மகேந்திரவர்மரின் மண்டகப்பட்டு பல்லவ கிரந்த கல்வெட்டு குடைவரைகள் - பாறைகளை குடைந்தெடுத்து கோவில்களையோ, மண்டபங்களையோ உருவாக்குவதின் பெயர் தான் குடைவரைகள்  இக்கலை வடத்தமிழக்த்தில் பல்லவர்களாலும் தென் தமிழ்கத்தில் பாண்டியர்களாலும் அறிமுப்படுத்த பட்டது  பல்லவ பேரரசன் முதலாம் மகேந்திரவர்மன் (கிபி 600 - 630 ) இக்குடவரைக்கலையை விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு எனுமிடத்தில் அறிமுகப்படுத்துகின்றான்  இக்குடைவரையிலுள்ள கல்வெட்டில் சிவ, விஷ்ணு ,  பிரம்மாவுக்கு அழியக்கூடிய சுதையாலும், உலோகத்தாலும் , சுண்ணாம்பாலும் கட்டாமல் விசித்ர சித்தன் பாறையால் குடைந்து எழப்பிய குகைக்கோவில் எனும் பொருட்படும் பல்லவ கிரந்த கல்வெட்டு அமைந்துள்ளது மண்டகப்பட்டை போன்றே இப்பல்லவ மன்னன் மாமண்டூரிலும் அதனைத்தொடர்ந்து சென்னையிலுள்ள  பல்லவாரத்திலும் (பல்லவபுரம்) குடைவரைகளை எடுப்பித்தார் பல்லாவரம்   தன் பெயரிலேயை பல்லவனைச்சுமக்கும் இவ்வூரில்  கண்டெடுக்கபட்ட கற்கோடாரிகளை கொண்டே இந்தியாவில் பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்று  ஆங்கிலையே ஆராய்சியார்களால் இந்திய தொல்லியல் தேடல்களுக்கு தொட...