வேடுவ சிவனும் அர்ஜுனனும் - கிராத அர்ஜுனா
சிவனாரின் 64 வடிவங்களில் ஒன்று வேடுவ சிவ வடிவம் , க சிவபெருமானிடம் பாசுபதம் பெறுதல் பொருட்டு அர்ஜுனன் சிவனை நோக்கி தவம் கொண்டிருந்தார், அதனை கலைக்க எண்ணி துரியோதனன் முகாசுரன் என்ற அரக்கனை அனுப்பினார், அவ்வரக்கன் பன்றி வடிவில் தவத்தினை கலைக்க அர்ஜுனன் மீது பாய்ந்தார், இதனால் கோபமுற்ற அர்ஜுனன் வில்லால் அவ்வரக்கனை தாக்கினார், அதே சமயத்தில் மற்றொரு அம்பும் அவ்வரக்கன் மீது பாய்ந்தது, அவ்வம்பு வேடுவனாக வந்த பரம்பொருள் சிவபெருமானது, இரு அம்புகளும் சரியான நேரத்தில் அப்பன்றியை தாக்கின, இறந்த அப்பன்றி யாருடைய அம்பினால் இறந்தது என்று, பார்த்திபனுக்கும், வேடுவனாக வந்த சிவனாருக்கும், வாக்குவாதம் ஏற்பட்டு அது இறுதியில் மற்போர், விற்போராக மாறிற்று, தனக்கு சமமாய் ஒருவர் போரிடுவதால் சந்தகமுற்ற அர்ஜுனன் தன்னுடன் போரிடுவது சாதாரண வேடுவன் இல்லை என்று உணர்ந்தார் இருதியில் வேடுவனாக வந்த சிவபெருமான் இறுதியில் தன் சுய உருவினை பார்த்திபனுக்கு காட்டி பாசுபதம் அளித்தார் இந்நிகழ்வு தேவரா திருப்பதிகங்களிலும் சிவபெருமானின் திருவிளையாடாலாக இடம்பெற்றுள்ளது "பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபத மீந்துகந்தான்&quo